சென்னை: கஷ்டம் தான், ஆனா முடியும். நஷ்டம் தான், ஆனா மீண்டு வந்திடலாம் என்று வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டு துவண்டு போய் விடாமல் மனம் நிமிர மந்திர சொற்களை சொல்லிப்பாருங்கள். உற்சாகத்தோடு உத்வேகமும் சேர்ந்து ஜெயித்து விடுவீர்கள்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை அடிக்கடி வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
- போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
- நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
- உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
- பணம் தானே போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல..
- சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
- இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
- கஷ்டம் தான், ஆனா முடியும்…
- நஷ்டம் தான், ஆனா மீண்டு வந்திடலாம்.
- இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?
- விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
- விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு. இதுபோன்ற மந்திர வார்த்தைகள் உங்களை உறுதியாக்கும்.