சென்னை: மும்மொழிக் கொள்கை என்றால் என்ன என்று தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள்.
நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் மூன்று மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை. அதாவது, தாய் மொழி, ஆங்கில மொழி & மூன்றாவதாக வேறு மாநில மொழி. இதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டு, பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலத்தவர் பெரும்பாலும் இந்தியை மூன்றாவது மொழியாக எடுத்து படிக்கின்றனர்.