சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைக் கடற்கரைப் பகுதிகளில் வளிமண்டலத்தில் கீழ்நோக்கி சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தின் பல இடங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்லாப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாகப்பட்டினம், விருதுநகர், விருதுநகர் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கோவை ஆகிய 28 மாவட்டங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.