சென்னை: டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்ரி நிறுவனம் சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு 12 வீடுகளில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிகளை வழங்க உள்ளது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டாக்டர் அகர்வால் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி வளாகத்தில் உலக பார்வை தினத்தையொட்டி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் டாக்டர் கல் சௌந்தரி, கற்பகம் தாமோதரன், மஞ்சுளா ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்ரி நிறுவனம் சென்னையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்காக 12 வீடுகளில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை நடத்த உள்ளது.
கண் கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளோம். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, அக்டோபர் 31 வரை நகரத்தில் உள்ள அனைத்து கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச விரிவான கண் பரிசோதனைகளை நடத்துகிறது.
இதில் பங்கேற்று பயனடைய 9594924048 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்தியாவில் 0-15 வயதுக்குட்பட்ட 1000 குழந்தைகளில் ஒருவர் பார்வைக் குறைபாடுள்ளவராக இருப்பதால், கண்கள் விலைமதிப்பற்றவை என்பதை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் புரிந்துகொள்வது அவசியம்.
வெளியில் செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து உங்கள் கண்களை குளிர் கண்ணாடிகள் மூலம் பாதுகாப்பது முக்கியம் மற்றும் டவல்கள் அல்லது கண் சொட்டுகள் போன்ற தனிப்பட்ட பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும்.
கேரட் மற்றும் இலைக் காய்கறிகள் மற்றும் கீரைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் அவர்கள் பார்வையை வலுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.