நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள டிரைவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் நடைமுறைகளை விரிவாகப் பார்ப்போம்.
இக்கோவிலில், 4 ஓட்டுனர் பணியிடங்கள் நிலுவையில் உள்ளன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், முதலுதவி சான்றிதழ், ஓட்டுநர் அனுபவ சான்றிதழ் மற்றும் நல்ல உடல் தகுதி ஆகியவை தேவை. விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2024 தேதியின்படி 18 வயது நிரம்பியவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இந்த டிரைவர் பதவிக்கு மாதம் ரூ.9,250 வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை: இந்த பதவிகளுக்கான தேர்வு செயல்முறை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை: இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் தேவையில்லை.
விண்ணப்பங்களை “உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம், நாமக்கல் மாவட்டம் – 637 211” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 04.10.2024 மாலை 5 மணிக்குள்.