சென்னை: தமிழகத்தில் தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. குளிர்காலத்தில் 10 ஆயிரம் மெகாவாட்டாகவும், கோடையில் 20 ஆயிரம் மெகாவாட்டாகவும் இருக்கும். கோடை சீசனில், உச்சகட்டமாக இந்த ஆண்டு மே 2-ம் தேதி மின் தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் துவங்கினாலும், பல மாவட்டங்களில் செப்டம்பர் மாதமே மழை பெய்யும். இதன் காரணமாக அந்த மாதத்தில் மின் பயன்பாடு வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு, செப்டம்பர் கோடையில் எப்போதும் வெப்பமானதாக இருந்தது. அதன் காரணமாக தினசரி மின் தேவை 17,500 மெகாவாட்டாக அதிகரித்தது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவை இயங்கவில்லை. இதனால், தினசரி மின் தேவை குறைந்துள்ளது. அதன்படி, தீபாவளிக்கு முந்தைய நாளில் தமிழகத்தில் தினசரி மின் தேவை 16,000 மெகாவாட்டாக இருந்தது. நேற்று 5 ஆயிரம் மெகாவாட் குறைந்து 11 ஆயிரம் மெகாவாட் ஆக இருந்தது. அதேபோல், சென்னையில் தினமும் 14.50 லட்சம் லிட்டர் பசும்பால் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளியையொட்டி, கடந்த 2 நாட்களில் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.