சென்னை: 2025-26-ம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிவிப்பு பணிகளுக்கான மதிப்பீடுகளை விரைந்து தயாரித்து அரசின் ஒப்புதலை பெறவும், தடுப்பணைகள், அணைகள், மதகுகள், பாலங்கள், ஆழ்துளை கிணறுகளை செயற்கையாக புனரமைத்தல் போன்ற திட்ட அறிவிப்புகளை உடனடியாக தொடங்குமாறு மண்டல தலைமை பொறியாளர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று உத்தரவிட்டார்.

மேலும், டெல்டா மாவட்டங்களில் 2025-26-ம் நிதியாண்டில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், மேட்டூர் உட்பட அனைத்து மண்டலங்கள் தொடர்பான 1071 பணிகள், 6179.60 கி.மீ., நீளத்துக்கு, ரூ. 120 கோடி மதிப்பீட்டில், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், தற்போதுள்ள பணிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து, கால்வாய் இறுதி வரை தடையின்றி தண்ணீர் வருவதற்கான பணிகளை விரைந்து முடிக்க மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.