சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவர்களை நம்பி மறைமுகமாக பல லட்சம் உழைக்கும் குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், மூன்று முறை மின் கட்டணம் உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, விசைத்தறியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு என பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகவும் குறைவாக உள்ளதால், கூலி உயர்வு கோரி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.