சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம், வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மின்வெட்டுக்கான காரணம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் சென்னை முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து X பக்கத்தில் பகிர்ந்துள்ள விளக்கத்தில், “நேற்று இரவு மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், தீ விபத்தில் இரண்டு ஊட்டிகள் சேதமடைந்தன. இதனால் சென்னையில் மின்சாரம் தடைபட்டது. எனினும் மாற்று வழிகளை வழங்குவதற்கு மின்சார சபை துரிதமாக செயற்பட்டு அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக மின்சாரம் சீரமைக்கப்படுவதை உறுதி செய்தது.
வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நம்பகமான அமைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. மின்வெட்டு காரணமாக சென்னையில் அத்தியாவசிய தேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. தற்போது மின்சார சேவை 100 சதவீதம் சீரடைந்துள்ளது.