சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் 2,321 மெகாவாட் திறன் கொண்ட 47 நீர்மின் நிலையங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமானது. இவற்றின் அருகே உள்ள 74 சிறிய அணைகளில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கி மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. மேலும், இந்த அணைகள் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது.

இதனால் அணையின் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, உலக வங்கி நிதியுதவியுடன் அணைகளை சீரமைக்கும் பணியில் மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது. அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்தல், கரைகளை பலப்படுத்துதல், 20 அணைகளில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் 2015 முதல் 2020 வரை ரூ. 167 கோடியில் மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தில் 2-ம் கட்டப் பணிகள் 27 அணைகளில் ரூ. 277 கோடி செலவில் நடக்கிறது. இப்பணி, 2021-ல் துவங்கி, 2027-ல் நிறைவடையும். இதுவரை, 10 அணைகளில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், 6 அணைகளில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 3-வது கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் குந்தபாலம், பில்லூர், பாபநாசம் அணைகளில் ரூ.177 கோடி. இதற்காக அடுத்த மாதம் உலக வங்கியுடன் மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்ய உள்ளது. மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- சீரமைப்பு பணிகள், இந்த ஆண்டு துவங்கி, 2031-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.