சென்னை: பாதுகாப்பு நடவடிக்கையால், கடந்த 27 மாதங்களில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கவில்லை. தெற்கு ரயில்வே உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. ரயில் தண்டவாளத்தை யானைகள் கடக்கும் 9 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

யானை நடமாட்டத்தை கண்டறிய போத்தனூர், மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தில் சென்சார் கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரெயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.