சென்னை: இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்:- கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியில் இருந்தபோது இறந்த 10 மருத்துவ ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். தொற்று பயத்தால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்திருந்தபோது, அவர்கள் இரவும் பகலும் தங்கள் கடமைகளைச் செய்தனர்.
டெல்லி வரலாற்றில் அவர்களின் பங்களிப்பு மிகவும் தன்னலமற்ற அத்தியாயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் கூறியுள்ளார். கர்நாடகாவில், கொரோனா நெருக்கடியின் போது, அரசு மருத்துவர்களின் சேவைகள் அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். தமிழ்நாட்டில், அன்றைய தினம், மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ரூ. 1 கோடி இழப்பீடு வழங்குவதாகக் குரல் எழுப்பினார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரியும் போது இறக்கும் அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் முதல்வராக பதவியேற்ற பிறகு, மாநில அரசு இன்றுவரை 10 பைசா கூட இழப்பீடு வழங்கவில்லை. இறந்த 11 மருத்துவர்களில் ஒரே ஒருவரான டாக்டர் விவேகானந்தனின் குடும்பத்தினர், முதலமைச்சரிடம் கண்ணீருடன் அரசு வேலை கேட்டு மன்றாடிய பிறகும் இன்றுவரை கருணை காட்டவில்லை.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல நல்ல திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருவதாக நமது முதல்வர் பெருமையுடன் கூறுகிறார். ஆனால் டெல்லி முதல் கர்நாடகா வரை அரசு மருத்துவர்களை அங்கீகரிக்கும் விஷயத்தில், தமிழ்நாடு மட்டும் அரசு மருத்துவர்களை அங்கீகரிக்க மறுப்பது வேதனையளிக்கிறது. எனவே, தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரியும் போது இறந்த அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
மறைந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு அரசு பணி உத்தரவு வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசு ஆணை 354ஐ அமல்படுத்தி, அதன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.