தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் என சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது.

அதேபோல், மார்ச் 5-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு 27-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 28-ல் துவங்கி, ஏப்., 15-ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தேர்வை, பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் என, 9 லட்சத்து 13 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.