சென்னை: குளோபல் எனர்ஜி அண்ட் என்விரான்மென்ட் ஃபவுண்டேஷன் சார்பாக, குளோபல் எனர்ஜி தலைவர்கள் மாநாடு சமீபத்தில் புதுதில்லியில் உள்ள ரோசெட் ஹவுஸ் ஏரோசிட்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு 2025-ம் ஆண்டிற்கான குளோபல் என்விரான்மென்டல் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் எம்.ஏ. சித்திக்கிற்கு வழங்கப்பட்டது.

மேலும் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் தலைமை சுற்றுச்சூழல் ஆலோசகர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவாவால் பாராட்டப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் திட்ட இயக்குநர் டி. அர்ஜுனன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். குளோபல் என்விரான்மென்டல் சிறப்பு விருது, மாற்றத்தை உருவாக்கி அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் சிறந்த நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் அவர்களது குழுக்களை கௌரவிக்கிறது.
காற்றின் தரம், வள பாதுகாப்பு, சூரிய ஆற்றலின் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த சுற்றுச்சூழல் பசுமை தோட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதன் முயற்சிகளுக்காக தனித்து நிற்கிறது. இந்த விருதைப் பெற்ற ஒரே மெட்ரோ நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மட்டுமே. இந்த தகவல் சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.