சென்னை: ”தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! அயராது உழைப்போம்!” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நம்பிக்கைகளுடன் மலரும் இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில், மக்கள் பயன்பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல்வேறு உன்னத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை, இந்த நேரத்தில் பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.