சென்னை: மத்திய அரசின் தேசிய தகுதி மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடந்தது. இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவற்றைச் சரிபார்க்கலாம்.
மேலும், இத்தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற தகுதியான 6,695 மாணவர்களின் விரிவான பட்டியலும் மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.