தனியார் மினி பஸ்களை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
அப்போது, தனியார் மினி பஸ்கள் இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சென்னையில் தனியார் மினி பஸ்களை அனுமதிப்பதற்கு பதிலாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, சென்னையில் மினி பஸ் இயக்கம் அதிகரிக்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்தாலும், அரசு மினி பஸ்களை இயக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.