சென்னை: தமிழக அரசின் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநில சுற்றுலா ஆணையரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநருமான சி.சமயமூர்த்தி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுற்றுலாத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறையால் ஆண்டுதோறும் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த டூர் ஆபரேட்டர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம் மற்றும் சிறந்த சுற்றுலா வழிகாட்டி போன்ற 17 வகை விருதுகள் இதில் அடங்கும்.
2024ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் (நேற்று) விண்ணப்பிக்க வேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்கும் காலக்கெடு தற்போது ஆகஸ்ட் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சுற்றுலா விருதுகள் செப். 27ஆம் தேதி வழங்கப்படும்.