சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறியுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கடந்த 9-ம் தேதி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள 34,793 நியாய விலைக் கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 18-ம் தேதி நிலவரப்படி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 1 கோடியே 87 லட்சத்து 14 ஆயிரத்து 464 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணி வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.