சென்னை: தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்ப தேர்வு வாரியத் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்குப் பதிவியல் ஆகிய வணிகவியல் தேர்வுகளை பிப்ரவரி மாதம் தொழில்நுட்பக் கல்வித்துறை நடத்த உள்ளது. மாணவர்களின் நலன் கருதி இத்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை திருத்தம் செய்யலாம். இதற்கு அபராதம் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.