சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்காவை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்தல், மண் வளத்தை பாதுகாத்தல், தமிழகத்தில் நாஞ்சில்லா உணவுகளை உற்பத்தி செய்தல் ஆகிய அடிப்படை நோக்கத்துடன் இந்த ஆராய்ச்சி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1000 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த பூங்கா அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
காவிரி குடிநீர் திட்டத்தை உளுந்தூர்பேட்டையில் இருந்து சிப்காட்டுக்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலை மாறாவிட்டால் சேலம் மாவட்டத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரித்தார்.
மேலும், முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 4 கட்ட திட்டங்களை ரத்து செய்த திமுக அரசு, இதில் உள்ள நிதி குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றார். புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் எதையும் தமிழக அரசு முன்வைக்கவில்லை என்றும், ஏற்கனவே உள்ள திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசும், வேளாண் துறையும் என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.