நாமக்கல்: நாமக்கல்லில் பூணூல் திருவிழாவை முன்னிட்டு கத்திபோடும் திருவிழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமார்பாளையத்தில் பட்டு கைத்தறி நெசவுத் தொழிலை குல தொழிலாக கொண்டு வாழும் தேவாங்கர் சமுதாய மக்களின் பூணூல் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தங்களது இஷ்ட தெய்வமான சௌடேஸ்வரி அம்மனிடம் மழை வேண்டி, கத்தி போட்டு ஊர்வலமாகச் சென்று பூஜை செய்யப்பட்ட பூணூல் பெற்றுக் கொண்டனர்.