சென்னை: உங்கள் சருமத்தை பராமரிக்க சில எளிய வழிகளை நீங்கள் தினசரி காலையில் செய்ய வேண்டும். அதில் ஒன்று தான் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது. எதற்காக இது முக்கியம் என்றால் இது உங்கள் முகத்தில் இரவு முழுவதும் தேங்கியுள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை அகற்றும். மேலும் இது உங்கள் முகத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.
இரவு நேரத்தில் சருமத்தில் தேங்கும் எண்ணெய் பிசுக்கை அகற்றுவதோடு அல்லாமல் குளிர்ந்த நீர் காலை நேர வீக்கத்தையும் குறைக்கிறது. சரும செல்கள் இரவில் மீண்டும் புத்துயிரூட்டப்பட்டு துளைகள் விரிவடையும் போது வீக்கம் ஏற்படுகிறது.
முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது நீங்கள் இளமையாக தோற்றமளிக்க செய்யும். அதேபோல் ஒரு ஐஸ் கட்டியை முகத்தில் வைத்து தேய்ப்பதும் மற்றொரு சரும பராமரிப்பு செயலாக கருதப்படுகிறது. முகத்தில் தண்ணீரை அடித்துக் கழுவுவது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை கணிசமாக அகற்றும்.
இது சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு சோர்வையும் நீக்குகிறது. குளிர்ந்த நீர் ஒரு நொடியில் அதிக ஆற்றலை ஏற்படுத்தும். உங்கள் சருமமும் அதிக இரத்தத்தை பம்பு செய்ய துவங்கும்.
ரோஸ் வாட்டரைப் போல குளிர்ந்த நீரும் இயற்கையான டோனராக (toner) செயல்படுகிறது. எனவே வீட்டில் உங்களிடம் டோனர் இல்லையென்றால் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். உண்மையில், இது சருமத்தை டோனிங் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது.