சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை நேற்று தொடங்கியது. கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு ரூ.105 மற்றும் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை நேற்று காலை தொடங்கியது. சீனியர் மோட்டார்மேன் பிச்சாண்டி கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இந்த ரயிலை இயக்கினார்.
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையே தலா 2 சேவைகளும், கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே தலா ஒரு சேவையும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பிரதான வழித்தடத்தில் இயங்கும் போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கடற்கரையில் இருந்து கோடம்பாக்கம் வரை ரூ.35, மாம்பலம், சைதாப்பேட்டை ரூ.40, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் ரூ.60, தாம்பரம் பேரூராட்சி, குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ரூ.85 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரிக்கு ரூ.90, காட்டாங் கொளத்தூர், மறைமலைநகருக்கு ரூ.95, சிங்கபெருமாள்கோயிலுக்கு ரூ.100, பரனூர், செங்கல்பட்டுக்கு ரூ.105. மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 620 கடற்கரை-எழும்பூர் வழித்தடத்திற்கு செங்கல்பட்டு வழித்தடத்திற்கு ரூ.2,115-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்த ஏசி மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை.
இந்த ரயிலுக்கு தனி கட்டண அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் கோரிக்கை: இதனிடையே, குறைந்தபட்ச கட்டணத்தை குறைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறுகையில், “மெட்ரோ ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அதேபோல், ஏசி மின்சார ரயில் கட்டணத்தையும் குறைக்க வேண்டும். இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”பல்வேறு வசதிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில், சென்னை ரயில்வே கோட்டத்தின் முதல் ரயில்.
இதுவும் நீண்ட தூர ரயில் தான். 10 கி.மீ.க்கு ரூ.35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் எத்தனை கி.மீ.க்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கட்டண மாற்றம் குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது.