குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-ம் சீசனுக்காக நடப்பட்ட 1.90 லட்சம் மலர் நாற்றுகள் பூத்து குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது இதமான வானிலை நிலவி வருகிறது.
மேலும், கனமழை காரணமாக குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இரண்டாம் கட்டமாக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட சால்வியா, பிளேகஸ், காஸ்மாஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம் ஆகிய 75-க்கும் மேற்பட்ட ரகங்களில் 1.90 லட்சம் மலர்ச்செடிகள் நடப்பட்டன.
தற்போது இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ளதால் அனைத்து செடிகளிலும் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறியதாவது:-
குன்னூருக்கு இரண்டாம் கட்ட சீசனுக்காக வந்துள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவை கண்டு ரசித்து வருகின்றனர்.