சென்னை: பிரேசில் லெஜண்ட்ஸ் மற்றும் இந்தியன் லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை காண மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நேரு ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது.

போட்டிக்கான ஸ்பான்சர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம். போட்டி நுழைவுச்சீட்டுகளில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.