ராமேஸ்வரம்: தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்களின் காவலை நான்காவது முறையாக நீட்டித்து இலங்கை மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 25ம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது விசைப் படகை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், வானவன்மாதேவியைச் சேர்ந்த முத்துசெட்டி (70), அவரது மகன்கள் மதி (38), ராஜேஷ் (35), வைத்தியநாதன் (45), கலைமுருகன் (25) ஆகியோரைக் கொன்றனர். கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (60), கடலூரைச் சேர்ந்த மணிபாலன் (55), ஆந்திராவைச் சேர்ந்த கங்காலை கொருமையா மற்றும் 2 மீனவர்கள் என மொத்தம் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது, இலங்கை ரோந்து படகில் இருந்த இலங்கை கடற்படை அதிகாரி ரத்நாயக், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் படகில் இருந்து தவறி விழுந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் இது தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 10 மீனவர்களின் காவல் திங்கள்கிழமை முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி சுபரஞ்சனி ஜெகநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களின் காவலை நான்காவது முறையாக ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.