சென்னை: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா. கன்னியாகுமரி திமுக மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார். ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்யா சிங்குக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சரவண பிரசாத்துக்கு விற்றதாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அஜிதா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி இளந்திரன் தள்ளுபடி செய்தார்.