சென்னை: மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாகவும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிலர், பாதிக்கப்பட்ட பயணிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தங்களை இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொள்கின்றனர். “உங்கள் விமானம் தாமதம் அல்லது ரத்து செய்யப்பட்டால் உங்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
உங்கள் பயண விவரங்கள், ஆதார், பான் எண்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை வழங்க வேண்டும். எனவே பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் சென்னை விமான நிலைய அதிகாரிகள் எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய விமான நிலைய ஆணையத்தின் பெயரை பயன்படுத்தி, விமானம் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டால் உரிய இழப்பீடு வழங்குவதாக கூறி, போலி மொபைல் போன் அழைப்புகள் மூலம் பயணிகளை ஏமாற்றி வருகின்றனர். இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இழப்பீடு வழங்கும் திட்டம் இல்லை. எனவே, இதுபோன்ற தகவல்களை பயணிகள் நம்ப வேண்டாம். தேவைப்பட்டால், பயணிகள் விமான நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்கலாம். போலி தொலைபேசி அழைப்புகள் வந்தால், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.