இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அன்புமணி: இண்டேன், பாரத் காஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் போன்ற சமையல் எரிவாயு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், இந்தியில்தான் பதில் வருகிறது. இதுவும் ஒருவகை நவீன ஹிந்தி திணிப்புதான்.
இந்நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் செய்து வருவதால், தமிழில் சேவை வழங்க வேண்டும். ஆனால் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்தியில் மட்டும் பதில் அளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழில் பேச வேண்டும் என்று சொன்னால் மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மாநில மொழிகளில் பதிலளிக்க மறுப்பதை நியாயப்படுத்த முடியாது. தமிழுக்கு பதிலாக இந்தியில் மட்டுமே சேவை வழங்கியதற்காக காஸ் நிறுவனங்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இந்தி திணிப்பை கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். எரிபொருள் நிறுவனங்களின் கட்டணமில்லா ஹெல்ப்லைனில் புகார்களை பதிவு செய்பவர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கப்படுவதால் தமிழக மக்கள் சிரமப்படுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தை தங்கள் விருப்பமாக தேர்வு செய்தாலும், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இந்தியில் மட்டுமே பதிலளிக்கின்றனர். இந்தியைத் திணிக்கும் எண்ணெய் நிறுவனங்களின் இந்த ஆதிக்க உணர்வு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.