சென்னை: பலரும் இக்காலத்தில் பிளட் பிரஷரால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் இரத்த பித்த சமன் முத்திரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
செய்முறை: நடுவிரல், மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். ஏனைய விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். தினசரி 10 முதல் 15 நிமிடங்கள் செய்தாலே போதும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.
பயன்கள் : இரத்த அழுத்தம் உடனடியாக கட்டுக்குள் வந்து விடும். தலைசுற்றல், படபடப்பு குறையும். வெயிலில் அலையும் போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப்படபடப்பு இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
அந்த நேரத்தில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம். விரிப்பில் மீது நேராக சப்பணம் இட்டு அமர்ந்து நாற்காலியில் பாதங்கள் தரையில் பதிய அமர்ந்தபடி செய்யலாம். வெறும் வயிறு அல்லது சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து செய்யலாம்.