சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6330-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ. 50,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6.400-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1000-க்கும் மேல் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 6330-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ. 50,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 87.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 87,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்திருந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 4 நாட்கள் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிந்தது. ஆனால் அதன் பின்னர் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தங்கத்தில் புதிய முதலீடு செய்பவர்களும் தயக்கம் காட்டுகின்றனர்.