ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் தமிழ் மாதத்தில் மிக முக்கியமான மாதம். இந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு வழிபாடுகள் நடைபெறும். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஆடித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில், திருவிழா காலங்களில், சேலம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும், ஏராளமான பக்தர்கள் சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் மற்றும் ஆடி 18 சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 03.08.2024 சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை என்பதால், அதற்குரிய வேலை நாளாக வேறு நாளை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.