சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
எனவே, விடுமுறையை கருத்தில் கொண்டு ஜன., 10-ம் தேதி முதல் மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் வெளியேற தயாராக உள்ளனர். அரசுப் பேருந்துகளில் இருக்கைகளை ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்வது வழக்கம். இப்போது 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வகையில் நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி, சொந்த ஊர் செல்வதற்கான முன்பதிவு துவங்கி, வேகமாக நடந்து வருகிறது. பண்டிகைக் கால நெரிசலைத் தவிர்க்க, பேருந்து இருக்கைகளை அரசுப் போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது TNSTC செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.