திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறவிருக்கும் திருத்தேர் திருவிழா (டிசம்பர் 10) மற்றும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா (டிசம்பர் 13) தொடர்பாக, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் தலைமையில் 14ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், விழாவுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. குறிப்பாக, பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள், குடிநீர், மருத்துவ சேவைகள், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் பணிகள் குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
இணைப்பு சிற்றுந்துகள் மற்றும் கூடுதல் தொடர்வண்டி சேவைகளை இயக்குவதற்கான திட்டங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் பொதுமக்களுக்கு விழா தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சிறப்பு தலைமைச் செயலாளர்கள், பொது சேவை துறை அதிகாரிகள், மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.