சென்னை: மாநில அரசு ஊழியர்களுக்கு 01-01-2025 முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும் என முதல்வரின் அறிவிப்பின்படி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 2025 முதல் ஏப்ரல் 2025 வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் செலுத்த வேண்டும்.

திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடும் போது, ஒரு ரூபாய்க்கு குறைவாக வரும் தொகை 50 பைசா அல்லது அதற்கு மேல் இருந்தால், அதை அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிட வேண்டும். அவ்வளவுதான். 50 பைசாவுக்கு குறைவாக இருந்தால் விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.