தஞ்சாவூர்: அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல மீட்பு சங்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது.
மாநிலத் துணைத் தலைவர் திண்டுக்கல் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கே.ஜி.ஆர்.மூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் தசரதராமன் வரவேற்றார்.
கூட்டத்தில் சட்ட ஆலோசகர் பிச்சப்பா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சங்க மாநில தலைவர் கதிரேசன் தன்னிச்சையாக செயல்பட்டு, சங்க விதிகளுக்கு முரண்பாடாக செயல்பட்டதால் மாநில பதிவாளரிடம் புகார் கூறப்பட்டது. தொடர்ந்து பதிவாளர் அறிவுரைப்படி பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் 60 பேரில் 36 பேர் அரசு நோட்டரி பப்ளிக் அனுமதி உடன் ஆஜர்படுத்தப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து கதிரேசனை நீக்கிவிட்டு தஞ்சை ராஜாவை மாநில தலைவராக நியமனம் செய்வது என்று ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அகவிலைப்படியை அரசிடம் கேட்டுப் பெறுவது. கோரிக்கை நிறைவேற்றப்படாவிடில் போராட்டம் நடத்தி பெறுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநிலத் துணைச் செயலாளர் கே.சேகர், மாநில துணைத்தலைவர் சுப்பையன், மாநில துணை பொது செயலாளர் ராஜகோபால், மாநில துணை செயலாளர் மணி எழிலன், மாநில துணைத்தலைவர் பாலசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்