உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் தமிழக ஆளுநர் ரவி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் புனித நீராடினர்.
மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநர் ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று புனித நீராடினர். உ.பி., பிரயாக்ராஜில் கடந்த ஜன.13 முதல் மகா கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.
இதுவரை 57 கோடிக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி உள்ளனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் ஆளுநரும், அண்ணாமலை நீராடியுள்ளனர். இதுகுறித்து இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.