சென்னை: ரயில்வே பராமரிப்பு காரணமாக, குருவாயூர், ஆலப்புழா விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் (வண்டி எண். 16127) இன்று மற்றும் வரும் 25-ம் தேதியும் சாலக்குடி வரை மட்டுமே இயக்கப்படும்.
சாலக்குடி – குருவாயூர் இடையே இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா (22639) விரைவு ரயில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (22640) நாளையும், வரும் 26-ம் தேதி வரை பாலக்காட்டில் இருந்து சென்னை சென்றலுக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.