சென்னை: ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கும் ஜேஇஇ மெயின் 2-ம் கட்ட தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர, கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ மெயின்ஸ் மற்றும் மெயின்ஸ் என இரண்டு கட்டங்களாக நடைபெறும். மெயின் தேர்வு தேசிய தேர்வு முகமையால் (NTA) ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
2025-26-ம் கல்வியாண்டிற்கான JEE மெயின்ஸ் 1-ம் கட்டத் தேர்வு ஜனவரி 22 முதல் 30 வரை நடத்தப்பட்டது. சுமார் 13 லட்சம் பேர் தேர்வெழுதினர். பிப்ரவரி 11-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து ஜேஇஇ மெயின் 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 1-ம் தேதி துவங்கி 26-ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில் தற்போது ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களை nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண்களிலும், jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என NDA செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.