தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இம்மழை, மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்காக ஏற்படினது. இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதாக தெரிவித்துள்ளது.
தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
“நேற்று கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பதிவாகி உள்ளது. ஒரு மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் கனமழை ஏற்பட்டது.”
மஞ்சோலையில் 500 மிமீ, மயிலாடுதுறை – கடலூரில் 300 மிமீ, தூத்துக்குடி, கோவில்பட்டியில் 350+ மிமீ மழை பதிவாகியுள்ளன.
குற்றாலம் வரலாற்று சிறப்பான மழைப் பொழிவைக் கண்டுள்ளது.பெரம்பலூர், அரியலூர் இடையே பரவலாக மழை பெய்தது.ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது.
ராணிப்பேட்டையில் நந்தியாற்றில் அதிக அளவு நீர் வெளியேறி பூண்டி அணைக்கு 13,000 கனஅடி நீர் வந்துள்ளது.ஆயக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரே நாளில் மோசமான மழை பெய்துள்ளது.அதனுடன், கொடைக்கானலுக்கு இன்னும் கனமழை வாய்ப்பு இருப்பதால், சுற்றுலா செல்ல வேண்டாம் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதேபோல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மழை இல்லை.