சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பலர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். சென்னையில் உள்ள கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்காக 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து இசிஆர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளும், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருத்தணி செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.
மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை, ஆந்திரா செல்லும் பேருந்துகள் தவிர, திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் ஒரு சில பேருந்துகள் இயக்கப்படும். மற்ற அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.