கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?
மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு இன்று (பிப். 26) மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விடுமுறை அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 8ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அத்தியாவசிய பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என்றும் ஆட்சியர் அழகு மீனா குறிப்பிட்டுள்ளார்.