சென்னை: முன்னதாக சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற சீமான் நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்த்தாய் பாடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய சீமான், முதலமைச்சரை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பாபாசி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பபாசி பொதுச்செயலாளர் முருகன் அளித்த பேட்டியில், “சிறப்பு விருந்தினராக வந்திருந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்க வேண்டும். புத்தக கண்காட்சி பாதைக்கு எந்த பெயரை வேண்டுமானாலும் வைப்போம். இந்த விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும். பதிப்பகம் திட்டமிட்டு இதை நடத்தியிருக்கிறது,” என்றார்.
பபாசி தலைவர் சொக்கலிங்கம் பேசுகையில், ”சீமான் மேடை ஏறும் முன், அரசியல் பேசாமல், புத்தகங்கள் பற்றி மட்டுமே பேச வேண்டும் என, அறிவுரை கூறினேன். சீமானின் பேச்சுக்கு பபாசி கடும் கண்டனம். நீங்கள் அழைத்து வரும் நபர் அரசியல் பேசக்கூடாது என பதிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிப்பாளர் தன்னையும் பதிப்பகத்தையும் விளம்பரப்படுத்த புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்தியுள்ளார்.
அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கத்தைக் கேட்டபின், பதிப்பகம் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் புத்தக வெளியீடுகளுக்கான கட்டுப்பாடுகளை வரையறுப்போம். சீமானுக்கு சொந்தக் கொள்கைகள் இருக்கலாம், ஆனால் இது ஒரு பொது மேடை, அவர் இங்கு சொன்னதுதான் பிரச்சனை. 48 வருடங்களில் நடக்காத ஒன்று தற்போது நடந்துள்ளது. புத்தகக் கண்காட்சிக்கு விருந்தினராக வந்த சீமான் எப்படி இப்படிச் செய்வார்? தன் மானத்தைக் காக்கத் தவறிவிட்டார். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.