சென்னை: வாஷிங் மிஷினை சுத்தம் செய்யும் முறை… வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வாஷிங் மிஷின் மிக மிக முக்கியமானது. துணியில் இருக்கும் அழுக்கை போக்கும் இந்த பொருளில் அழுக்கு சேர்வது என்பது பொதுவான ஒன்று. இதை எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை வைத்து எப்படி வாஷிங் மிஷினை சுத்தம் செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
1.சமையல் சோடா
2.வினிகர்
சமையல் சோடா மற்றும் வினிகரை நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இப்போது பேஸ்டை வாஷிங் மெஷினில் அனைத்து இடங்களிலும் தடவி 15 நிமிடம் அப்படியே ஊற விடவும். பின்பு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி அனைத்து இடங்களையும் நன்கு தேய்க்கவும். அதன் பிறகு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு தண்ணீரில் நனைத்து வாஷிங் மெஷினை துடைத்து விடவும். அப்புறம் பாருங்கள் வாஷிங் மிஷின் புதிது போல மாறிவிடும்.
முதலில் 1-2 லிட்டர் தண்ணீரை சூடுப்படுத்தி வெதுவெதுப்பாக எடுத்து கொள்ளவும். இப்போது அதில் 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன் பின்பு இந்த கலவையை நன்கு ஆற வைக்கவும். இப்போது இந்த நீரில் காட்டன் துணியை போட்டு நனைத்து எடுக்கவும். அதை வைத்து அழுக்கு படிந்த வாஷிங் மிஷினை துடைத்து எடுக்கவும்.