தேனி: தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த தொழிலாளி (40) என்பவருக்கும், போடி பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. தொழிலாளிக்கு இது முதல் திருமணம். இருப்பினும், அந்தப் பெண் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இதில் முதல் 2 கணவர்களும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் 3-வது திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது பெண்ணின் வயிறு சற்று பெரியதாக காணப்பட்டது. ஆனால், மணமகன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், மாதங்கள் கடந்த நிலையில், மனைவியின் வயிறு பெரிதாகி வருவதால், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ‘‘உங்கள் மனைவி கர்ப்பமாக உள்ளார்.

திருமணத்தின் போது அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. ஆனால், கணவன் பரிதாபப்பட்டு மனைவியுடன் வாழ முடிவு செய்தான். இந்நிலையில் கடந்த மாதம் இவரது மனைவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதையடுத்து சின்னமனூர் காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த பெண் தேனியில் உள்ள தனியார் காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது. போலீசார் மற்றும் பெண்ணின் கணவர் அங்கு சென்று பார்த்தபோது, அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், கணவருடன் வாழ விருப்பம் இல்லை என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக புலம்பிக்கொண்டே தங்கும் விடுதியை விட்டு வெளியேறினார்.