சென்னை: முதுகு வலி… இது ஏற்படாத மனிதர்களே இருக்க முடியாது. நம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காகச் சிகிச்சை பெறும் பிரச்சினைகளில் இந்த முதுகு வலி நிச்சயம் முதலிடத்தில் இருக்கும்.
முதுகுப் பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள், இடைவட்டு (Inter vertebral Disc) ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மைக் காரணங்கள். சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும்.
முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம். கூன் விழுந்த நிலையில் உட்காருவது, வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல், தினமும் பைக்குகளில் நெடுந்தொலைவு பயணிப்பது, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது, அதிக எடையைத் தூக்குவது, உடற்பயிற்சி இல்லாதது, ஊட்டச் சத்துக்குறைவு, உடல் பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும்.
இப்படி முதுகுவலி வந்தவர்களால் எவ்வித பணியும் செய்ய முடியாது. அவர்கள் வலியை பொறுத்துக் கொள்ள முடியாத நிலை உருவாகி மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். இந்த முதுகு வலி தண்டுவடத்தையும் பாதிக்கும். இதற்கு என்னதான் தீர்வு.
சென்னை அண்ணாநகரில் உள்ள அக்குபஞ்சர் நிபுணர் பரிமளா செல்வியை சந்தித்தோம். அவர் நம்மிடையே உரையாடியதில் இருந்து உங்களுக்காக.
டாக்டரின் தொடர்பு எண் : 77082 11515
முதுகு வலி, முதுகு தண்டுவட வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுவது பெரியவர்கள் மட்டுமில்லை. சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எல். 1முதல் எல்.5 வரையிலும், எஸ் 1, எஸ்.2 என்று முதுகு வலியால் பாதித்தவர்கள் நிறைய பேருக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம். இதில் சிறுவர்களும் உள்ளனர். அதிகளவில் பைக் ஓட்டுபவர்கள் முதுகு தண்டுவட டிஸ்க் பிரச்னையால் அவதியடைகின்றனர். மார்க்கெட்டில் பணியில் உள்ளவர்கள் அதிக நேரம் பைக் ஓட்டுவதால் முதுகு தண்டுவட வலியால் பாதிக்கப்படுகின்றனர்.
இப்படி முதுகு தண்டுவடம், முதுகு கீழ் வலியால் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க முறைதான். வேலைக்காக ஓடும் நிலைதான் உள்ளது. இந்த முதுகு வலிக்கு சிறுவர்களும் பாதிக்கப்படுவதற்கு கால்சியம் குறைவாக இருப்பதும், உணவு பழக்கமுறையில் மாற்றம்தான். நள்ளிரவு நேரத்தில் கூட உணவு சாப்பிடுகின்றனர். அனைவரும் வைட்டமின் டி குறைவு இருக்கிறது. இவர்கள் கிலோ கணக்கில் கால்சியத்தை சாப்பிட்டாலும் அது அப்சர் பண்ணாது. இது வீணாகும் நிலைதான். 100க்கு 85 பேருக்கு கால்சியம் குறைவு இருக்கிறது. ஓய்வில்லாத நிலை, பைக்கில் அதிகம் பயணம் செய்வது போன்றவை முதுகு தண்டுவட பிரச்னைக்கு காரணமாகிறது.
முதுகு வலியும், முதுகு தண்டுவட வலி வந்துவிட்டதே நான் என்ன செய்வேன் என்று அச்சப்பட தேவையில்லை. இதை அங்குபஞ்சர் சிகிச்சையால் சரி செய்ய முடியும். இந்த முதுகுவலி பிரச்னைக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு தீர்வையும், உணவு பழக்க வழக்கத்தையும் சரியாக கடைப்பிடிக்க சொல்கிறோம். முதுகு தண்டுவடம், கீழ் முதுகு வலி, போன்றவற்றுக்கு அறுவை சிகிச்சைத்தான் முடிவு என்று கூறப்பட்டவர்களையும் கூட அது இல்லாமல் முழுமையாக அக்குபஞ்சர் சிகிச்சையில் குணப்படுத்தி நலம் பெற செய்துள்ளோம். அக்குபஞ்சர் மேஜிக் கிடையாது. அது சயின்ஸ். இதை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் நலம் பெறும் போது மனப்பூர்வமாக உணர்ந்து தெரிவித்துள்ளனர்.
எனவே முதுகு தண்டுவடம் உட்பட முதுகு வலி பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதை அங்குபஞ்சரால் முழுமையாக குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சை மூலம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று குணமடைந்து தங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றிக் கொண்டுள்ளனர். முதுகு தண்டுவடம், முதுகில் வலி போன்றவற்றை உதாசீனப்படுத்தாமல் உடனே எங்களை அணுகுங்கள். சிகிச்சை பெற்றும் நலமாகி கம்பீரமாக செல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.