சென்னை: அடுத்த சில நாட்களில், இந்தியாவில் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போதைய வருமான வரிச் சட்டம் 1961ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதிய சட்டம் 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வருகிறது. முக்கியமான மாற்றங்களில், வருமான வரி செய்யும் செயல்முறை எளிமையாக்கப்படும், புதிய தளம் மற்றும் செயலி உருவாக்கப்படுகின்றன. தனி நபர்களுக்கும், பிஸ்னஸ் வருமான வரிக்கும் மாறுபட்ட சிக்கல்களை நீக்கி, எளிதாக்கும் திட்டம் உள்ளது.
பழைய வருமான வரி regime, புதிய regime உடன் தொடரும் ஆனால் பழைய முறையில் உள்ள சலுகைகள் குறைக்கப்படலாம். புதிய வருமான வரி முறை ஆன்லைன் மூலம் எளிதாக்கப்படும், இதன் மூலம் வரி தாக்கல் செய்யும் செயல்முறை மேலும் துல்லியமாக இருக்கும். இதற்கு மத்தியில், வீட்டு லோன் சலுகை போன்ற புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்படலாம்.
முக்கியமாக, புதிய சட்டம் பிப்ரவரி 6-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.