அவசர நிதி தேவைப்படும் சூழ்நிலைகளில் நகைகளை அடமானமாக வைத்து வங்கியில் கடன் வாங்க வாய்ப்பு உள்ளது. நகைக் கடன் விதிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. தங்கக் கடன் வாங்கும் போது, நகைகளின் மதிப்பு மற்றும் கடன் தொகை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்ற விவரங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும்.
வங்கிக் கடன் பெறும் போது 18 வயது முதல் 75 வயதுக்குள் இருக்க வேண்டும். தங்கத்தின் தூய்மை குறைந்தது 18 காரட் இருக்க வேண்டும். முகவரிச் சான்றுகள், அடையாளச் சான்றுகள், பான் கார்டு, ஆதார் அட்டை மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் தேவை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடனுக்கு 7.5% முதல் 10% வரை வட்டி வசூலிக்கின்றன. மேலும் கடனை 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.
இது தவிர, செயல்பாட்டுக் கட்டணம், மதிப்பீட்டுக் கட்டணம் மற்றும் மொத்த வட்டி விகிதம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களையும் பார்க்க வேண்டும். வங்கிகள் 75% மதிப்பீட்டில் தங்கக் கடனை வழங்குகின்றன. உங்கள் நகைகளின் தூய்மையை உறுதிப்படுத்த, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து நீங்கள் கடனைப் பெறலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் நகைக் கடனை எளிதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான அடிப்படையை வழங்குகிறது.