சென்னை: கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படுவதால், முன்புறம் உள்ள விஜிபி வளாகம் எதிரில் கடல்நீரை நன்னீராக்கும் ஆலையின் பிரதான குழாய் மாற்றப்படுவதால் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை 24 மணி நேரம் குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:- கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) 6 வழிச் சாலையாக மாற்றப்படுவதால், நெடுஞ்சாலைத் துறை மூலம் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நெம்மேலியில் அமைந்துள்ள நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உப்புநீக்கும் ஆலையின் பிரதான குழாய் பதிக்கும் பணி விஜிபி வளாகம் முன்பும், இன்று மாலை 6 மணி முதல் நாளை (24 மணி நேரம்), அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட திருவான்மியூர், பெசன்ட் நகர், கலாசேத்ரா காலனி, இந்திரா நகர் (பகுதி), கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி ஆகிய பகுதிகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக போதிய அளவு குடிநீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி அவசரத் தேவைகளுக்காக லாரிகள் மூலம் (டயல் ஃபார் வாட்டர்) பதிவு செய்து குடிநீரைப் பெறலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளுக்கும் குடிநீர் தொட்டிகள் மற்றும் லாரிகள் மூலம் தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் தடையின்றி சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், மேலும் விவரங்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.